33. கடவுளின் கொடையான திருத்தூதர் புனித மத்தியா
பன்னிரண்டு திருத்தூதர்களில் இறுதியாக யூதாஸ் இஸ்காரியோத்திற்கு பதிலாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் புனித மத்தியா. நாம் எல்லோருமே கடவுளின் கொடை. நமது குடும்பம் , உற்றார் , உறவினர் , நண்பர்கள் அனைவரும் கடவுளால் நமக்குக் கொடுக்கப்பட்ட கொடை என்பது நாம் நன்கு அறிந்ததே. மத்தியா கடவுளின் கொடை நிறைவாக்குபவர் கடவுளால் வெளிப்படுத்தப்பட்டவர் என்ற 3 நிலைகளில் சிந்திப்போம். முதலாவது அவர் கடவுளின் கொடை. இவ்வுலகம் கடவுள் நமக்குக் கொடையாகக் கொடுத்தது. பொதுவாக நாம் எதனை கொடை என்று கருதுவோம். நாம் பல ஆண்டுகளாக எதிர்பார்த்த ஒன்று நமக்கு பல இடர்ப்பாடுகளுக்கு மத்தியில் கிடைக்கும்போது அதனை கொடையாகக் கருதுவோம். அல்லது எதிர்பாராத ஒரு நிகழ்வு நமக்கு நிறைவேறி மகிழ்வினைக் கொடுக்கும்போது அதை நாம் கொடையாகக் கருதுவோம். அது போல் தான் மத்தியாவும். 12 சீடர்களாக முழுமையாக இஸ்ரயேலின் பன்னிரண்டு குலங்களை அடையாளப்படுத்துபவர்களாக இருந்த சீடர்களில் ஒருவர் இப்போது இல்லை அவருக்கு பதிலாக ஒருவரை கடவுள் கொடையாக கொடுக்கின்றார். ஆக நாம் எதிர்பாராத வேளையில் நமக்கு மகிழ்வூட்டும் வண்ணம் கடவுள் செய்யும் செயலே கொடையாகக் கருதப்பட...