முன்னுரை அதிகாலை பனி போல , அழகான வாழ்க்கையின் அருமையான தருணம் இது. ஆயிரம் உறவுகள் அன்பாய் கூடிட, கோர்த்த மாலைகள் கழுத்தினில் மகிழ்ந்திட, ஆண்டவரின் அருள் பொங்கி வழிந்திடும் ஆனந்த கானம் இது. இந்த மகிழ்வென்னும் பொன்னாளிற்கு புதுப்பொலிவேற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என பல கருத்துக்கள் திருமணத்தைப் பற்றி நம்மிடையே பேசப்படுவதுண்டு. புனிதரும் வானதூதரும் இறையடியார்களும் இடைவிடாத இறை புகழ் பாடும் சொர்க்கத்தில் இரு உள்ளங்கள் இணையும் நாள் நிச்சயிக்கப்படுகின்றது. நல்லதை நினைத்து, நன்மை செய்து, நலன்களை மட்டும் விரும்பும் மனிதர்கள் வாழும் இந்நில உலக சொர்க்கத்தில் தங்களையும் இணைத்து, இறையருள் நாடும் மணமக்கள் ................... இருவருக்காக வேண்டுவோம். திருமணம் என்னும் அருட்சாதனத்தை மகிழ்வோடு பெற்று, அதன் பலனை தங்களின் வாழ்நாளில் வெளிப்படுத்த அருள் வேண்டும் இவர்களோடு இணைந்து செபிப்போம். ஆயிரங்காலத்துப் பயிரை அறுவடை செய்ய வேண்டும் என்ற இலக்கோடு தங்களது பயணத்...
அருட்தந்தை ஆல்வின் அம்மன் பேட்டையில் வந்துதித்த அற்புத சூரியனே அன்பர் பணிசெய்ய அழைக்கப்பெற்ற ஆர்வளனே உன்னை அழைத்ததும் நாமே உரிய பணிசெய்ய நுழைத்ததும் நாமே என்ற ஆண்டவரின் அற்புத வாக்கை அனுதின வாழ்வாக்க அர்ப்பணித்தவனே தந்தை சின்னப்பன் தாய் விக்டோரியாவின் மூன்றாவது முத்தானவனே அந்தோணி டேவிட், லூயிஸ் விக்டரின் அருமை தம்பியே அழைத்த இறைவனின் பாதையில் பயணிக்க இருக்கும் அற்புத வேளையில் ஆயிரம் நன்றிகள் கூறுகின்றோம். உன்னை எம் குடும்பத்தில் கொடையாக கொடுத்ததற்கு. நல்ல தொடக்கம் பாதி வெற்றி உனது தொடக்க கல்வியோ அம்மன் பேட்டை புனித வளனார் நடுநிலைப்பள்ளி. உயரம் கூட கூட உவகை கூடும் உன் உவகையைக் கூட்டிய உயர்நிலைப் பள்ளி வரதராஜன் பேட்டை புனித தொன்போஸ்கோ பள்ளி. மேலானவர்கள் மேன்மையான செயலை செய்வார்கள் உன்னை மேன்மைப்படுத்தி மெருகேற்றியது கும்பகோணம் சிறுமலர் மேல்நிலைபள்ளி. கலைகளையும் கல்வி தரங்களையும் களப்படமற்ற நட்புகளையும் நீ கற்று - வசந்த காலங்களை வாழ்வில் பெற்று தந்தது கும்பகோணம் அரசினர் கலைக்கல்லூரி. நம்மை நாம் யார் என உணர உதவும் ஆன்மிக வாழ்...
எல்லாம் படைத்து அதில் என்னையும் வைத்து காலமெல்லாம் காக்கும் கருணை தெய்வமே உம்மை வணங்கி வாழ்த்தி இச்செப வேளையை துவங்குகிறோம். தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். அன்னையாய் அருகிருந்து ஆசானாய் வழிநடத்தி அற்புதங்கள் புரியும் இறைவா உமக்கு நன்றி. இவ்வுலகைப் படைக்க காத்திருந்த அந்த முதல் நாளில் இருளாய் இருந்தது. உலகம் இருளாய் இருப்பது நல்லத்தல்ல என்று எண்ணி ஒளியை உண்டாக்கினீர். ஒளி உண்டானதால் உயிரினங்கள் வளரத் தொடங்கின. புல் பூண்டுகள் முளைக்கத் தொடங்கின. வெறுமையில் இருந்த இவ்வுலகம் நிறைவை அடையத் தொடங்கியது. அது போல இந்நாளின் நிறைவை அடைய நன்றி என்னும் உணர்வில் திளைக்க நாம் கூடியுள்ளோம். நம் கைகளில் தாங்கியுள்ள இந்த ஒளி நம் வாழ்வென்னும் பொன்னாளை ஒளிர்விக்க அருள் வேண்டுவோம். ஒளி கொண்டு நம் வாழ்வை மெருகேற்ற, வளமான வாழ்வாக நம் வாழ்வு அமைய அருள்வேண்டி பவனி செல்வோம். மகிழ்வையும் செழிப்பையும் குறிக்கும் சந்தன குங்கும திலகமிட்டு, தனது வாழ்வின் அடுத்த ஆண்டில் புதிய பணியினை மேற்கொள்ளக் காத்திருக்கும் சகோதரி அவர்களின் வாழ்வு ஒளி மயமாக மகிழ்வாக செழிப்பாக அமைய வாழ்த்தி மகிழ்வோம்....