பொங்கட்டும் உள்ளம் உவகையால்

ஏர் பிடித்து ஏற்றம் தந்து,
உடல் நீரை உரமாய் தந்து,
கண்ணெனப் பயிரைக் காத்து,
மண்ணில் உயிர்க் காக்கும்
உழவர்களின் உயர்வைப் போற்றும் நாள்
புத்தாடை உடுத்தி, புத்தரிசி ,புதுப்பானைப்
பொங்கலிட்டு, படைத்தவனுக்கு படையலிட்டு,
பூரித்து மகிழும் பொங்கல் திருநாள்.
இ ந் நாளில் நம்
மனமென்னும் நிலத்தை
நல்லேர் கொண்டு உழுது,
அன்பென்னும் நீர் பாய்ச்சி,
நல்லெண்ணமெனும் விதை தூவுவோம்.
வளரும் நாற்றாய் இடம் மாறுகையில்
பற்றினை விடுத்து,பாரினில் தடம் பதிப்போம்.
அன்பில் ஆழ வேரூன்றி தட்பவெப்பம் பெறுவோம்.
வழி மாறுகையில் வழிகாட்டல் உரம் பெறுவோம்.
கால்களில் உரம் பெற்று கிளைகளில் பலன் தருவோம்
ஒற்றை விதையில் ஓர் நூறு மணிகள் பெறும்
வல்லமை நம்மிடம் உண்டு
என்ற நம்பிக்கை யுடன் வளர்ந்திடுவோம்.
செங்கரும்பு மஞ்சள் பச்சரிசி பொங்கலோடு
உள்ளம் நிரம்ப இனிமை வழிந்தோட‌
உவகை மனம் கொண்டே வாழ்ந்திடுவோம்:-) :-) :-) :-) :-) :-) :-)

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.