அம்மா அன்பின் முழுமை

அன்னையர் தினத்தன்று மறுபடியும் உங்களை என்னுடைய எழுத்துக்கள் மூலம் சந்திப்பதில் ரொம்பவே சந்தோசம் . நீண்ட இடைவெளிக்குப் பின் ..... எழுதுவதற்கு இரண்டு காரணம் ஒன்று என் அம்மா மற்றொன்று எனது கனவு. அம்மா எல்லாருடைய வாழ்விலும் மறக்க முடியாத ஒரு உறவு. என் தாய் உடன் பிறந்த அறுபரில் நான்காவது . நெல் குற்றி அரிசி எடுத்து விற்கும் தாய் தந்தையரின் மகள். உடன் பிறந்தவள் படித்து முன்னேற தன் படிப்பை பாதியில் விட்டவள் . தந்தையின் நண்பரின் மனைவி மரித்துப் போக , தன் மகளை தருவதாக  சொன்ன அப்பாவின் வாக்குக்கு மூத்த மூன்று பெண்களும் மறுப்பு சொல்ல, தன் வாழ்வை வாக்காக்கியவள்.அன்று முதல் இன்று வரை யாருக்கும் மறுப்பு சொல்லியதே கிடையாது. எல்லோருடைய வாழ்விலும் ஒரு கனவு உண்டு. அடுத்தவர்க்கு உதவி செய்வதில் என் தாய்க்கு நிகர் என் தாயே. ஊரார் விழாக்களுக்கு எல்லாம் முன் நின்று பணி செய்யும் அவள் நிலை கண்டு கடிந்துகொண்ட நாட்களுமுண்டு. பாவம் தனியா கஷ்டப் படுராங்க நாமதானமா உதவியா இருக்கணும் என்று என்னை அவள் சமாதானப் படுத்திய நேரங்களுமுண்டு. தான் பட்ட கஷ்டம் நான் பட என்னை விட்டதில்லை படிப்பை தவிர எதையும் தொட அனுமதித்ததில்லை.  என் தாயை போலவே உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் தாய் சிறப்பு . ஆண்டுக்கு ஒருமுறை அல்ல நாளுக்கு ஒருமுறை கொண்டாடலாம் நம் அன்னையர்க்கு தினம் . தியாகம் என்ற சொல்லின் அர்த்தம் தான் தாய் . நமது கனவை நனவாக்க தனது கனவை உரமாக்கியவர் . நமது நம்பிக்கைச்செடி வளர தனது வேர்வைத்துளிகளையும் பாச நிலத்தையும் தந்தவர்  அன்பு இரக்கம் தியாகம் கொண்ட அத்தனை தாயுள்ளத்திற்கும்  இந்த மகளின் மனமார்ந்த வாழ்த்துக்கள் அனுபவங்கள் வாழ்க்கைப்பாடங்கள். அந்த அனுபவங்கள் அனைத்தையும் அள்ளி சுமந்த்தவள் நம் தாய் அவள் சொல்லாத பாடங்களே இல்லை கற்பிக்காத கல்வியே இல்லை . கற்போம் கற்பிப்போம் தாயுள்ளத்தோடு. என்றும் புன்னகை செய் மனமே:-):-) :-) :-) :-) :-) :-)  

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.