நன்றி!!!!!!!!!!
காலையிலேயே புத்துணர்வு
வெறும் பத்து பேர் மட்டும் வரும் கோவிலில்
இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர். வாசலில் தோரணம்,
வழியெல்லாம் வாழ்த்து அட்டைகள்,அலங்கார சோடனை, அழகு மலர்கள், ஆரத்தி விளக்குகள் என்று இது நம்ம கோவிலா என்று வியக்கும் படி இருந்து. விழா நாயகன் நாயகி யாராக இருக்கும் என்று எண்ணி வியந்தேன். பல்லக்கில் பவனியாக வருவாரா? இல்லை பட்டுடுத்தி பவ்யமாக வருவாரா? மக்கள் கூட்டம் அலைமோத, பாடல்கள் பரவசமூட்ட, வந்தார் விழா நாயகர். அதிர்ச்சி எண் 1 அவர் ஒரு குருவானவர். எண் 2 எண்பத்து ஆறு வயது முதிர் இளம் குருவின் குருத்துவ பொன்விழா!!!!!
விழா முழுதும் கண்களில் கண்ணீருடன் அவர்,அவரைச் சுற்றிலும் அவர் பணி செய்த பங்குமக்கள், என
பார்ப்பவர் கண்களை பனித்தது. விழாவின் இறுதியில் நன்றி கூறல். வார்த்தை தடுமாற வாக்கியங்கள். வரிசை மாற, பல் போனால் சொல் போச்சு என்பதை மாற்றி தன் முதுமை மொழியில் பேசினார் . '' என் பெயரின் பொருட்டு எதை நீ துறக்கிறாயோ அதை இம்மையிலேயே நிரம்பப் பெறுவாய்'' இதை இன்று நான் அனுபவிக்கிறேன். இம்மட்டும் காத்து நலம் தந்த இறைவனுக்கு நன்றி!!!!!!!!!!
சோடனை , இசை, வாழ்த்து என்று என்னை வியக்க வைத்த அத்தனையும் ஒரு நொடியில் மறைந்தன. ஐம்பது வருட குருத்துவ வாழ்வு ,அதிலும் மேலைநாட்டில். எத்தனை வருத்தங்கள், வலிகள், வெறுமையான உணர்வுகள்.!!!!!!!!! அத்தனையும் மறந்து, வயோதிகத்து வாழ்க்கையின் உடல்நலக்குறைவை மறைத்து அவர் சொன்னது நன்றி!!!!!!!!
இறைவன் சொன்ன சொல் காப்பவர். அவர் விரும்புவது எல்லாம் அவரை நாம் இறுகப்பற்றிப் பிடித்துவாழ வேண்டும் என்பது மட்டுமே. எண்பத்து ஆறு வயதிலும் இறைவனைப் பற்றிப் பிடித்து வாழும் அவரது வாழ்வு எனக்கு ஒரு சவால். ஒரு முறை அல்ல பலமுறை முயற்சிப்போம் வெற்றி பெறுவோம் ஏனெனில் வெற்றியின் இறைவன் நம்மோடு. :-)
:-)