பணி வாழ்வு

 சொன்னதை செய்வது மட்டும் பணி அல்ல, சொல்லாததையும் செய்து மகிழ்விப்பதே மகத்தான பணி.

கேட்டு செய்யப்படும் பணியிலும் கேளாமல் செய்யப்படும் பணிக்கு வலிமை அதிகம். கடந்து செல்வதே கானக துறவியின் பணி.
கடக்க வேண்டும் வீட்டை நாட்டை ஊரை உறவை உணர்வை . இப்படி எல்லாம் இயல்பாய்  கடந்து இனிமையாய் பணி செய்தவர்கள் நம் மரியின் ஊழியர் சபை புனிதர்கள்.
வாழ்வே பணியாக வாஞ்சையே வடிவமாக வாழ்ந்தவர்களில் முக்கியமனவர் புனித சொஸ்தேனுஸ் இவரின் பணி வாழ்வு அழைத்தல் வாழ்விற்கு எத்துணை சிறப்பு செய்தது என்பதை நமக்கு எடுத்துரைக்க வருகின்றார். அருட்தந்தை ஆல்பர்ட் மைக்கேல் லாரன்ஸ் அவர்கள் தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை ஜீவமாதா இல்லத்திலிருந்து....    


https://www.youtube.com/watch?v=dp1ZXDpWIXI


இன்றைய உழைப்பின் வலி நாளைய வாழ்க்கையின் ஒளி  
 ஊக்கம் நிறைந்த உழைப்பாளி ஊசி முனையில் கூட நடந்திடுவான்.
ஏக்கம் நிறைந்த சோம்பேறி ஏணிகளாயிரம் இருப்பினும் எழ மாட்டான். அவ்வகையில் கிடைக்கும் வாய்ப்புக்களில் எல்லாம் இறைத்திருவுளம் அறிந்து பணிகள் பல செய்து பரமனை மகிழ்வித்தவர் நம் புனிதர். சமுதாய தேவைகளை சட்டென்று உணர்ந்து சரிசமமாக பழகி சேவை செய்தவர். குறிப்பறிந்து உதவி செய்து குன்றா பணியாற்றியவர்.  தாங்கள் வாழ்ந்த சமுக மக்களிடம் இயல்பாய் பழகி இனிமையாய் பணி செய்த நம் சபையின் புனிதர்கள் போன்று நாமும் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப நம் பணி வாழ்வை மெருகேற்றி மேன்மையடைவோம்.  

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.