தூய வளனார்.

பசிக்கும் முன்னே உணவளிப்பவள் தாய் என்றால் விழும் முன்னே கைகொடுப்பவர் தந்தை. தாயின் அன்பை பிறந்த பின் அறிந்து விடலாம் . தந்தையின் அன்பை அறிந்த பின் புது மனிதனாகவே பிறந்து விடலாம். தந்தைகளுள் சிறந்த தந்தையாய் இந்த தரணி சிறக்க வாழ்ந்து வாழ்வின் இலக்கணம் படைத்தவர் நம் சூசை தந்தை. தூய வளனார். எங்கும் வளமை எதிலும் வளமை எப்போதும் வளமை. வளமையையும் மகிழ்வையும் வற்றாமல் கொடுப்பவர். இவரது திருவிழாவினை நவ நாள் வழி சிறப்பித்து மகிழ இருக்கின்றோம். கன்னி மரியின் கற்பிற்கு பாதுகாவலாய் இருந்து காத்ததால், துறவறத்தாரின் கற்பின் பாதுகாவலர். நிறைமாத கர்ப்பிணியாம் மரியாளுக்கு காவலனாய் இருந்ததால் கர்ப்பிணிப்பெண்களுக்கு பாதுகாவலர். திருக்குடும்பத்தை எல்லா இக்கட்டிலிருந்தும் காத்ததால், குடும்பங்களின் பாதுகாவலர் நாடு விட்டு நாடு ஊர் விட்டு ஊர் அலைந்து தன் குடும்பம் சிறக்க பொறுமை காத்ததால் அகதிகளின் பாதுகாவலர். குழந்தை இயேசுவை ஞானத்திலும் அறிவிலும் வளர்த்ததால் கல்வியின் பாதுகாவலர். சாதரண தச்சுத்தொழிலை திறம்பட செய்து மகிழ்ந்ததால் தொழிலாளர்களின் பாதுகாவலர். இயேசுவுக்கு ஆன்மீகத்தொடு கூடிய அனுபவ அறிவையும் ஊட்டி தந்ததால் தந்தையர்களின் பாதுகாவலர். சாகும்வேளையிலும் மகிழ்வுடன் இருந்து அதை மேற்கொண்டதால் நல் மரணத்தின் பாதுலாவலர். திருச்சபை வளர்ந்தது இயேசுவால் அந்த இயேசுவையே இவ்வுலகிற்கு அடையாளப்படுத்த் காரணமாய் இருந்ததால் இவர் அகில உலக திருச்சபையின் தலைவர். இப்படி எண்ணிக் கொண்டே போகலாம் நம் சூசை தந்தையின் பண்புகளையும் பாதுகாவல்களையும். உறவுகளை வீட்டில் விட்டு விட்டு அவர்களின் உயர்வுக்காக. உழைத்து,. தன் துயரத்தை மறந்து பிறர் துயர் நீக்க போராடி, தன் வாழ்வில் தான் பெறாதவற்றை தன் பீள்ளைகள் பெற்று மகிழ வழி செய்து , தயக்கத்தைப் போக்கி தைரியத்தை கற்றுத்தந்து தூய தந்தையாக துணிவுடன் திகழும் நம் தூய வளனார் போல வாழ நவநாள் வழி அருள் பெறுவோம்.

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.