தமிழில் உள்ள ஓர் அருமையான வார்த்தை. ஆனால் தமிழர்களாகிய நாம் அதனை அதிகம் உபயோகிப்பதில்லை.ஆசிரியர்களைப் பார்த்து மாணாக்கர் கூறுவதோடு சரி நமது வணக்கம். அதுவும் வேண்டா வெறுப்பாய்.
பிறரை நாம் மதிப்பதற்கு அடையாளமாய் மரியாதை நிமித்தமாய் சொல்லும் ஒரே வார்த்தை வணக்கம். மேலை நாடுகளில் ஓர் நல்ல பழக்கம் உண்டு.ஆனால் அதனை தெரிந்து செய்கிறார்களா? இல்லை தெரியாமல் செய்கிறார்களா? என்று தெரியவில்லை. ஆனால் விஷயம் நல்லது. முன்பின் தெரியாத யாரைப் பார்த்தாலும் காலை வணக்கம், ஹாய், ஹலோ, வாழ்க, என்று கூறும் பழக்கம் உண்டு. நீ யாரென்று எனக்கு தெரியாது ஆனால் நீ நன்றாக வாழ், இந்ந நாள் உனக்கு இனிய நாளாக அமையட்டும் என்று வாழ்த்தும் ஓர் அருமையான பழக்கம். 
நாம் எவ்வாறு வாழ்த்துகிறோம்?
பிறரை வாழ்த்துவது இருக்கட்டும் நம்மில் எத்தனை பேர் நம்மை நாமே வாழ்த்துகிறோம்? நமது பெயரைச் சொல்லி காலை வணக்கம் என்றோ, வாழ்க என்றோ சொல்கின்றோமா?
இனியாவது தொடங்குவோமா? கண்ணாடி பார்க்கும் பழக்கம் நம்மில் பலருக்கு நிச்சயம் உண்டு. இனி பார்க்கும் பொழுது சிரித்த முகத்துடன், நமது பெயரைச் சொல்லி ................ காலை  வாழ்க, என்று சொல்லி பழகுவோம். இந்ந நாள் உங்களுக்கு இனிய நாளாகட்டும். வணக்கம்

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.