புன்னகை

                       
         புன்னகை அக அழகை கூர்மைப்படுத்தி, புற அழகுக்கு மெருகூட்டுவது. மழலையின் சிரிப்பில் மயங்காதவரும்,மட்டற்ற மகிழ்ச்சியில் புன்னகைக்காதவரும் இல்லை. புன்னகை ஓர் மருந்து. இலவச மருந்து,இயற்கை மருந்து.  வாழ்விற்கு ஊட்டம் அளிக்கக்கூடிய சத்து மருந்து. இம்மருந்தின் பற்றாக்குறையினால் தான் பலருக்கு வாழ்வில் நலமே இல்லை. நாமும் ஓர் மருத்துவரானால் என்ன என்று இன்று தோன்றியது. புன்னகை என்னும் மருந்தை அனைவருக்கும் கொடுப்போம், நலமளிப்போம் என்று உறுதி கொண்டேன். இன்று பார்க்கும் அனைவரையும் புன்னகைக்கும் முகத்துடன் வாழ்த்த எண்ணினேன்.( இதற்கு முன்னால் அழுதுகொண்டா இருந்தாய் என்று நினைக்க வேண்டாம்)
        குழந்தைகள், பெரியவர்கள், ஆண்கள், பெண்கள், என அனைவரையும் புன்னகையுடன் வாழ்த்தினேன். என்ன ஆச்சரியம்!!!!!!!! கொடுத்ததையே திரும்பப்பெற்றேன் மகிழ்வாக.! இயற்கை மருந்தினை நானும் திரும்பப் பெற்றுக்கொண்டேன். இதற்கு முன்னால் முகம் வாடியவாறு பார்த்த மனிதர்களும் முகம் மலர்ந்தனர்.
        நோயினால் நொந்தவர், முதுமையினால் வருந்தியவர், வேலைப்பளுவினால் அயர்ந்தவர், பிரச்சனையினால் குழம்பியவர் என அனைவர் முகத்திலும் புன்னகை என்னும் அணிகலன் அணியப்பட்டதும் அழகு பெற்றவராகத் திகழ்ந்தனர். இன்று ஒரு நாள் பயிற்சித்த இதனை  தொடர் ந்து ஏன் செயல்படுத்தக் கூடாது என்று எண்ணினேன்.தொடர் ந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன்.  
        நமது மனம் வாடினாலும் பிறர் மனதை மகிழச் செய்ய வேண்டும்.
              பகிர்ந்து வாழ்; மகிழ்ந்து பணி செய் ;
  என்ற விருது வாக்கை வாழ்க்கையாக்குகிறேன். காசா பணமா சிரிப்பு தானங்க சும்மா சிரிங்க . அதிகமா இல்லை, அளவா! சரியா?
                        புன்னகை செய் மனமே...............
              

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.