ஒன்றே செய் ; நன்றே செய்; அதைஇன்றே செய்; என்பர் இதில் நன்றாக செய்ய வேண்டும் என்ற ஆசை பலருக்கும் உண்டு. ஆனால் அதை அன்றே செய்ய வேண்டும் என்று எண்ணாத பலர் இங்குண்டு. எனது நண்பர் ஒருவர் ஒரு நாள், '' வலை தளத்தில் தான் எனது பொன்னான நேரத்தை வீணடிக்கிறேன். கூடிய சீக்கிரமே அனைத்தையும் என்னுடைய அலை பேசியில் இருந்து எடுத்து விடுவேன்'' என்றார் .எப்பொழுது என்றேன். நாளை என்றார். மறு நாள் கேட்டால், ''இன்று என்றா சொன்னேன் , நாளை என்றல்லவா சொன்னேன் என்கிறார்.
நாளை ,நாளை என்று நாம் சொன்ன நாளை எவர் அறிவார் நம்மையன்றி இவ்வுலகில்? நண்பர் மட்டுமல்ல நானும் இப்படித்தான் . ஏன் சில நேரங்களில் நீங்களும் இப்படித்தான். மனதுக்குள் , இப்படி இருக்க வேண்டும் .அப்படி இருக்க வேண்டும் .அப்படிச் செய்ய வேண்டும் .இப்படிச் செய்யவேண்டும் .என்று பல நேரங்களில் எண்ணுவதுண்டு. ஆனால் எப்போது செய்வது? இன்று வேண்டாம் நாளை செய்யலாம்? நாளை செய்யலாம் என்று தள்ளிப் போட்டுக் கொண்டே சென்றேன். நானாக நாளைச் செய்தால் (உருவாக்கினால்) அன்றிஅ ந்நாள் ஒருபோதும் வராது. நல்ல எண்ணங்கள், நற்தூண்டுதல்கள் எப்போதும் வாரா! மாறாக எப்போதாவது தான்வரும். தூண்டுதல்கள் கிடைத்தவுடன் செயலில் இறங்குபவரே வெற்றியாளராகிறார். நல்ல துவக்கம் பாதி வெற்றி என்பர். எதுவும் தொடங்கியவுடன் விரைவாக சென்றடைவதில்லை. நன்மை மெதுவாகவே சென்றடையும் ஆனால் நிலைத்து நிற்கும். எனவே நல்லன செய்ய தோன்றும்போதே செய்ய முற்படுவோம்
புன்னகை புரிவோம் .
எண்ணித்துணிக கருமம் ஏனெனில் வெற்றி நம் கையில்.
திருமணத் திருப்பலி
முன்னுரை அதிகாலை பனி போல , அழகான வாழ்க்கையின் அருமையான தருணம் இது. ஆயிரம் உறவுகள் அன்பாய் கூடிட, கோர்த்த மாலைகள் கழுத்தினில் மகிழ்ந்திட, ஆண்டவரின் அருள் பொங்கி வழிந்திடும் ஆனந்த கானம் இது. இந்த மகிழ்வென்னும் பொன்னாளிற்கு புதுப்பொலிவேற்ற வந்திருக்கும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறேன். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என பல கருத்துக்கள் திருமணத்தைப் பற்றி நம்மிடையே பேசப்படுவதுண்டு. புனிதரும் வானதூதரும் இறையடியார்களும் இடைவிடாத இறை புகழ் பாடும் சொர்க்கத்தில் இரு உள்ளங்கள் இணையும் நாள் நிச்சயிக்கப்படுகின்றது. நல்லதை நினைத்து, நன்மை செய்து, நலன்களை மட்டும் விரும்பும் மனிதர்கள் வாழும் இந்நில உலக சொர்க்கத்தில் தங்களையும் இணைத்து, இறையருள் நாடும் மணமக்கள் ................... இருவருக்காக வேண்டுவோம். திருமணம் என்னும் அருட்சாதனத்தை மகிழ்வோடு பெற்று, அதன் பலனை தங்களின் வாழ்நாளில் வெளிப்படுத்த அருள் வேண்டும் இவர்களோடு இணைந்து செபிப்போம். ஆயிரங்காலத்துப் பயிரை அறுவடை செய்ய வேண்டும் என்ற இலக்கோடு தங்களது பயணத்...