Transfer

                               இட மாற்றம்

 கெட் ரெடி என்ற வார்த்தையைக் கேட்டவுடன்     ஒட்டமெடுத்தது என் இதயத் துடிப்பு
 இருந்த இடத்தின் மேல் கொண்ட பற்றா, 
 இதயம் மகிழ்வித்தவர்களை
 பிரிய நினையாத  பித்தா, 
 தெரியவில்லை என்னவென்று எனக்கு           தொலைத்தக் கடவுளைத் தேடினேன்.
 என்னை இங்கே அனுப்புவாயோ? 
என்னை அங்கே அனுப்புவாயோ? 
என்ற மறைமுக உரையாடலில்
 அனுதினமும் அவரையும் குழப்பினேன் 
இதோ வருகிறேன் என்று 
அன்று முன்வைத்தக் கால் 
இன்று ஏனோ பின்வாங்குகிறது.
 மொழி தெரியாத நாடு 
வந்த ஓராண்டுக்குள் இடமாற்றமா?
 வேண்டாம் என்று சொல்லவும் துணிவில்லை    போகிறேன் என்று துணியவும் மனமில்லை     இதுவா? அதுவா? என்று குறிவைத்துப் பார்த்த‌     விரல்களில் வீக்கம் வந்ததுதான் மிச்சம்.
 இதில் எப்போதும் இரண்டு சாய்ஸ் தானா      குறைந்தது 5வது வேண்டாமா என்று 
மனதின்   பரிந்துரை வேறு.
 என்ன செய்யப்போகிறாய் என்னை? 
அந்த நாள்'வந்தது '' உனக்கு இடமாற்றம் இல்லை '' என்ற சொல் கேட்டதும்தான் தாமதம்
 அடைபட்ட உணர்வுகள் விடுதலையாயின.       வெப்பத்தால் நொந்தவர் குளிர்காற்றை        அனுபவிப்பதுபோல இதமானது மனம். 
உல்லாசம் உற்சாகம் 
இல்லாத ஒன்றிற்கா இவ்வளவு பெரிய                   போராட்டம்........................:-) 
என்றும் புன்னகை செய் மனமே
           :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-) :-)

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.