அருள்தரும் காலம்

  மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய் 
மண்ணுக்கே திரும்புவாய்  என்ற 
இறை மொழி கேட்டு மனம் திரும்பும் காலம் 
நம் பாவங்களுக்காக மனம் வருந்தி 
மன்னிப்புகோரி மன்றாடும் காலம் 
தவங்கள் பல செய்யத்தூண்டும்
தவக்காலம். இக்காலத்தில் 
உடல் வருந்தாமல் உள்ளம் வருந்துவோம்.
ஒருவர் மற்றவருக்காய் சிறப்பாய் செபிப்போம்.
மன்னிப்பைக் கொடுப்போம் பெறுவோம் 
ஒரு நாளில் ஓர் உதவி ஒருவர்க்கு
என்றே நாளும்  உயர்ந்திடுவோம் .
வாழும் கிறிஸ்துக்களாக மாறிடுவோம்.
அருள் மழை பொழியும் காலமாக 
இத்தவக்காலம் அனைவருக்கும் அமையட்டும் 

 
  
    

Popular posts from this blog

திருமணத் திருப்பலி

வாழ்த்து கவிதை அருட்தந்தை ஆல்வின்

நன்றி வழிபாடு.