இன்று இயேசுவின்சோதனைகளை திருப்பலியில் வாசிக்கக் கேட்டேன் . சோதனை என்றதும் எனக்கு ஞாபகம் வந்தது, என்னுடைய சிறுவயது விடுமுறை விவிலியப் பள்ளி ஞாபகம் தான். இயேசுவின் சோதனைகளைப் பற்றிய பாடம் இருந்தது. பங்குத்தந்தையின் வருகை, கேள்வி கேட்பார் தயாராகுங்கள் என்றார் ஆசிரியர். எனவே மூன்று சோதனைகளையும் உரு போட்டு மனப்பாடம் பண்ணினேன். ஆனாலும் பயம் என்னிடம் கேள்வி கேட்கக் கூடாது என்று வேண்டத்தொடங்கினேன். அது தான் நான் செய்த தப்பு என்று அப்புறம் தான் உணர்ந்தேன்.ஏன்னா நான் நினைச்சது ஒன்னு நடந்தது இன்னொன்னு. ஆண்டவரே எங்கிட்டக் கேள்வி கேட்கக் கூடாது என்று நான் வேண்ட, அதைப் பார்த்த அப்பொழுது ஆசிரியரான என் அக்கா ,எப்பொழுதோ அவளை நான் அடித்த பழியைத் தீர்த்துக் கொண்டாள் பாதரிடம் மாட்டிவிட்டு. என்னை அவர் எழுப்பிவிட, பயத்தில் படித்தது மறக்க, கல் ,மலை ஆனது . அப்பம் ,ஆப்பம் ஆனது. கிடைத்தது பரிசு மண்டையில் குட்டாக . வகுப்பு முடிந்ததும் தலையைத் தடவிக்கொண்டு வெளியே சென்ற என்னை பங்குத்தந்தை அழைத்தார். மறுபடியும் மண்டையைப் பதம் பார்க்கத் தான் கூப்பிடுகிறார் போல என்று பயந்து கொண்டே சென்றேன். பதில் தான் தெரியலைல அப்புறம் என்ன தெரிஞ்ச மாதிரி சொல்லிப் பார்த்த, என்றார். நான் சொல்லிப் பார்க்கல எங்கிட்டக் கேள்விக் கேட்கக் கூடாதுனு வேண்டுனேன் என்றேன். கேட்கக் கூடாதுனு வேண்டுனதுக்கு பதிலா நல்லா பதில் சொல்லணும்னு வேண்டிருக்கலாம்லனு சொன்னார். பல நேரங்கள்ல இந்த கஷ்டம் வேண்டாம்னு தான் நாம வேண்டுறோமே தவிர ,இந்த நல்லது வேணும்னு வேண்டுறதில்ல. அதனால இனி கொஞ்சம் மாத்தி யோசிப்போம் .கறை நல்லது மாதிரி கஷ்டமும் நல்லதுனு நினைப்போம். இது எனக்கு வேண்டாம்னு நினைக்கிறதுக்கு பதிலா, இது எனக்கு வேணும்னு நினைப்போம். ஏன்னா சோதனைகளும் துன்பங்களும் நம்மைப் பலப்படுத்தவே ,பண்படுத்தவே . என்றும் புன்னகை செய் மனமே.......
Sunday, 22 February 2015
கஷ்டம் நல்லது

இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...