Friday, 25 February 2022
3. நாற்பது நாட்கள்
40 லெண்ட் என்று ஆங்கிலத்தில் கூறப்படும் இவ்வார்த்தையின் மூலச்சொல் இலத்தின் மொழியாகும். குஆத்ராஜெசிமா என்பதற்கு நாற்பதாவது எண் என்று அர்த்தம். இத்தாலியில் குவரெசிமா என்று அழைக்கப்படுகிறது. தொடக்க காலத்தில் இலத்தீன் மொழியில் இடம்பெற்ற திருப்பலி செபங்கள் பாடல்கள் ஆங்கில மொழிக்கு மாற்றம் செய்யப்பட்ட போது வசந்த காலத்தின் சொற்பிறப்பியல் வேர்களை அடிப்படையாகக் கொண்ட லெண்ட் என்று மாற்றப்பட்டது. ஏனெனினில் இத்தவக்காலம் பெரும்பாலும் வசந்த காலம் எனப்படும் இளவேனிற்காலத்திலேயே கொண்டாடப்படுகிறது. நாற்பது நாட்களும் வசந்த கால நாட்களாக மாற்றம் பெற வேண்டும்.
40 என்ற எண் முழுமையின் அடையாளம். விவிலியத்தில் பல இடங்களில் இந்த 40 என்ற எண்ணும் சொல்லும் 98 முறை இடம்பெறுகின்றன.
நோவா காலத்து பெருவெள்ளம்,
மோசேயின் சீனாய் மலைப்பயணம்
எலியா இறைவாக்கினர் ஒரேபு மலையை அடைந்தது
யோனாஸ் இறைவாக்கினர் காலத்தில் நினிவே மக்கள் நோன்பு
ஆண்டவர் இஸ்ரயேல் மக்களை பாலைவனத்தில் நடத்தி சென்றது.
இயேசு பாலை வனத்தில் சோதிக்கப்பட்டது 40 நாட்கள். இப்படியாக நம்முடைய முன்னோர்களுக்கு மிகவும் முக்கியமான முழுமையான நாளாக இருந்தது இந்த 40 என்ற எண். எனவே தான் 40 நாட்களை முழுமையான தவ நாட்களாக அனுசரிக்க திருச்சபை வலியுறுத்துகிறது. நமது தமிழ் கலாச்சாரத்திலும் ஒரு மண்டலம் 48 நாட்கள் என்பது முக்கியமான ஒன்று. ஒரு மருந்தோ புதிய செயலோ தொடர்ந்து இந்த 40 நாட்கள் செய்யும் போது இயல்பாக நமது உடலும் மனமும் அதற்கு ஏற்றாற்போல மாறிவிடும்.
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றான் நீட வாழ்வார் என்ற குறலின் படி
ஐம்புலங்களினால் விளையும் ஆசையை அறுத்து பொய்மையில்லாத ஒழுக்க நெறியின்படி வாழ்ந்து உலகம் உள்ளளவும் புகழ் நிலை பெறுவோம். நோன்பு, செபம், தானம் என்பதை அதிகமாக வலியுறுத்தும் இக்காலத்தில் இதனை முழுமையாக கடைபிடித்து வசந்த கால வருகையை வரவேற்போம்.
முழுமை அங்கு முழுமை இங்கு முழுமையினின்று முழுமை வழிந்தோடுகின்றது முழுமையினின்று முழுமை வழிந்தோடிய பின்பும் முழுமை தங்கி நிற்கின்றது. 40 நாட்களை முழுமையின் அடையாளமாக உணர்ந்து முழுமையின் அடையாளமாம் இயேசுவின் மகிழ்வில் பங்கு கொள்ள முயல்வோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...