இன்னைக்கு என்ன ஸ்பெஷல்? வணக்கம் அன்பு உள்ளங்களே பிப்ரவரி 21 உலக தாய் மொழி தினம். உலகத்துல கிட்டதட்ட 7000 தாய் மொழிகள் பேசப்படுதுன்னு ஒரு ஆராய்ச்சி கூறுது. அதுல அடையாளம் காணப்பட்ட மொழிகள் நு பார்த்தோம்னா 6000. இதுல 43% மொழிகள் வரி வடிவம் பேச்சு வழக்கு இல்லாம அழிஞ்சிட்டு வருது. ஒவ்வொரு மொழிக்கும் ஒரு தனித்தன்மை, மரபு பாரம்பரியம் இருக்கு. தாய் மொழிங்கிறது ஒரு மனிதனோட அடையாளம் பெருமை. தாய் மொழியோட சிறப்பையும் பெருமையையும் மக்களுக்கு நினைவு படுத்தி சிறப்பிக்க தான் இந்த நாள் கொண்டாடப்படுது. வழக்கமா உலகளாவிய தினங்கள் கொண்டாடப்படுதுன்னா அதுக்கு காரண காரியம் உலகத்துல மூலை முடுக்குல இருக்கிற ஏதாவது ஒரு இடமா இருக்கும் ஆனா இந்த உலக தாய் மொழி தினம் கொண்டாட காரணம் நம்ம இந்தியா தான்.
1952 ல கிழக்கு பாகிஸ்தான் அதாவது இப்போதைய வங்காளதேச மக்கள் வங்காள மொழியையும் தேசிய மொழியா அறிவிக்கணும்னு போராடுனாங்க அதுல அவங்கள்ல நாலு மாணவர்கள் இறந்தும் போனாங்க. இந்த போராட்டத்துக்கு அப்புறமா தான் கிழக்கு பாகிஸ்தான் தனியா பிரிஞ்சு வங்கதேசமா மாறிச்சு.
1999 ல ஐக்கிய நாடுகள் கல்வி அறிவியல் பண்பாட்டுக் கழகம் நடத்திய ஒரு மாநாட்டில தாய்மொழிக்காக போராடி உயிர் நீத்த இந்த நாலு தியாகிகளுக்கு மரியாதை செய்ற விதமா இந்த நாளை உலக தாய் மொழி தினமா கொண்டாட அறிவிச்சாங்க.
தாய் மொழியை பிழை இல்லாமல் பேசவும் எழுதவும் தெரியாமல் இன்றைய இளைய சமுதாயம் வளருது. நுனி நாக்கில தமிழ் பேசி அதை கொல்றாங்க கேட்டா அது தான் நாகரீகம் நு சொல்றாங்க. உலகத்துலயே அதிக இலக்கிய நோபல் பரிசுகளை பெற்ற பிரான்ஸ் நாட்டு மக்கள் தங்களுடைய தாய் மொழியான ப்ரெஞ்சு மொழியில் பேசுறதை இன்னைக்கும் பெருமையாக நினைக்கிறாங்க.
சில நாடுகள்ள ஆங்கில மொழியோட ஆதிக்கம் ஆர்வத்தால தங்களோட தாய் மொழிய சரியா கத்துக்காம இருக்குற மக்களும் இருக்க தான் செய்றாங்க. உலக அளவில 40 % மக்கள் தங்களுடைய தாய் மொழிய சரியா கத்துக்கிறது இல்லைனு யுனெஸ்கோ செய்தி வெளியிட்டு இருக்கு. அதனால இந்த தாய் மொழி தினம் அன்னைக்கு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தணும் கிறதும் இவங்களொட நோக்கம்.
மூத்த விஞ்ஞானிகள், அவங்கவங்க துறையில சாதிச்ச எல்லோருமே தாய் மொழியா சரியா கத்துக் கிட்டவங்க தான். தாய் மொழி இல்லாம பிற மொழிகள கத்துக்கிறது சாத்தியம் இல்லன்னு உணர்ந்தவங்க அவங்க.
இன்னைக்கு எல்லாரும் அவங்க அவங்க தாய் மொழியக்கொண்டாடுறாங்க. ஆனா தமிழர்களாகிய நாம மட்டும் தான் மொழிகளுக்கெல்லாம் தாய் மொழியான தமிழ் மொழியக் கொண்டாடுறோம்.
தமிழின் சிறப்பு அதன் தொன்மையில் இல்லை தொடர்ச்சியில் இருக்கிறது.ந்னு சொல்வாங்க. உலகத்துல தொன்மையான மொழிகள் நிறைய இருக்கு ஆனா அது எல்லாம் பேச்சு வழக்கு இருந்தா எழுத்து வடிவம் இல்ல. எழுத்து வடிவம் இருந்தா பேச்சு வழக்கு இல்ல. நம்ம தமிழ் மொழி மட்டும் தான் பேச்சு எழுத்து ந்னு எல்லா விதத்துலயும் வாழ்ந்துட்டும் வளர்ந்துட்டும் இருக்கு. கிரேக்க எபிரேய இலத்தீன் மொழிகள் தொன்மையா இருந்தாலும் பேச்சு வழக்குல் இந்த மொழிகள் அதிகமா இல்லை. ஆனா தொன்மையாவும் தொடர்ந்து பேசப்பட்டும் தொடர்ச்சியான மொழியாவும் இருக்குறது நம்ம தமிழ் மொழி மட்டும் தான். ஆங்கிலேயர்கள் ஆட்சிக்கு கீழ இருந்தப்ப கூட எந்த விதமான அரசின் முயற்சிகளும் இல்லாம நீடிச்சு நிலச்சு நின்னது நம்ம மொழி மட்டும் தான்.
இந்த மொழியோட சிறப்பையும் மகிமையையும் நாம ஒரு நாளும் மறக்க கூடாது. நம்ம மொழியை நாம நேசிக்கணும் பிற மொழிகளையும் மதிக்கணும். மொழிங்கிறது பண்பாட்டோட மிகப்பெரிய கருவூலம். தொன்மையான மொழிகள் சில அழிஞ்சிட்டு வந்தாலும் புதிய மொழிகள் சில உருவாகிக்கிட்டும் தான் இருக்குது.
தமிழ்நாட்டில திருப்பூர் மாவட்டம் ஆனைக்கட்டி ஊரில தாசணுரு நாராயணன் கிறவரு ஆதன் கிற புதிய மொழியை கண்டு பிடிச்சு ஒரு நாவலும் எழுதி இருக்காரு 10 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு அந்த மொழியை கற்பிக்கவும் செஞ்சிருக்காரு.
இந்தா நாள்ல நம்மோட தாய் மொழியைக் கொண்டாடி மகிழ்றது மட்டும் இல்லாம அடுத்த தலைமுறைக்கும் அந்த சந்தோசத்தை உருவாக்கணும். பிற ,மொழிகளையும் மதிக்க கற்றுக் கொடுப்போம்.
சாவிலும் தமிழ் படித்தே சாக வேண்டும்.
என் சாம்பலிலும் தமிழ் மனமே கமழ வேண்டும்.
பாடையில் படித்துயிலும் போதிலும் பைந்தமிழில் அழும் ஓசை கேட்க வேண்டும்.
ஓடையில் என் சாம்பல் ஓடும் போதினிலும் என் தமிழ் சலசலத்து ஓட வேண்டும்.
அனைவருக்கும் இனிய உலக தாய்மொழி தின நல்வாழ்த்துக்கள். மீண்டும் இன்னும் ஒரு சிறப்பான நாளில் இன்னைக்கு என்ன ஸ்பெசல் மூலமா உங்களை சந்திக்கிறென் நன்ரி வணக்கம்,