Friday, 11 March 2022

13. கூடாரம்.

பொல்லாப்பு உனக்கு நேரிடாது வாதை உன் கூடாரத்தை அணுகாது என்னும் திருப்பாடல் வரிகள் முலம் நம்மை திடப்படுத்தும் இறைவனை தியானிக்க கூடாரத்தின் மகிமைனை அறிவோம். கூடாரம் பணி பொழுது போக்கு வேண்டுதல் நிமித்தம் தற்காலிகமாக போடப்படும் ஒரு சிறு வீடு. ஆக்கப் பணிகள் செய்ய ஆர்வமாக உருவாக்கப்படும் ஒரு இடம். இந்த தவக்காலத்தில் கூடாரம் அமைத்து இறைவனை தொழ, அவரோடு நெருங்கி உறவாட நாம் அழைக்கப்படுகிறோம். ஆலயம் சென்று நற்கருணைப் பேழையில் வாழும் இயேசுவை அடிக்கடி சந்தித்தலே இன்று நமக்கு அறிவுறுத்தப்படும் கூடாரம். கூடாரம் நிரந்தரமானது அல்ல. நாம் நமது ஆற்றலைப் புதுப்பிக்க பயன்படும் ஒரு ஆற்றல்ம் மையம். அந்த ஆற்றல் மையத்தில் இருந்து நாம் பெறும் சக்தி நம் வாழ்வை இன்னும் முன்னுக்கு கொண்டு வர உதவும். கூடாரம் அமைத்து செபிக்கும் பழக்கம் மோசே காலத்திலேயே தொடங்கிவிட்டது. அதற்கு முன் இஸ்ரயேல் மக்கள் வாழ்க்கை முறையே நாடோடிகளாக ஒரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாறிக் கொண்டே இருக்கும் நிலை. இறைவனை இயற்கையிலும் இறைவாக்கினர்களின் வடிவிலும் கண்டனர். கானான் தேசத்தை அடையும்வரை அவர்களின் நிலை அப்படித்தான் இருந்தது. அதன்பின் யாவே கடவுள் இஸ்ரயேல் மக்கள் தன்னை மிக நெருங்கி வர வேண்டும் என்பதை உணர்த்த சந்திப்பு கூடாரம் என்னும் அமைப்பை மோசே மூலம் உருவாக்கினார். இதனால் மக்கள் கடவுள் நம்மோடு இருக்கின்றார் என்பதை அதிகமாக உணரத்தொடங்கினர். கடவுள் வாழும் கூடாரம் புனிதமாக மதிக்கப்பட வேண்டும். அதனுள் நுழையும் முன் அக புற சுத்தம் மிக அவசியம், இறைவனை நெருங்க தனி செபம் மிக முக்கியம் என்பனவற்றை தாமாக அறிந்து கொள்ளத்தொடங்கினர். கூடாரத்தின் இறைவனை அமைதியில் சந்தித்து, தங்களுடைய தவறுகளுக்கு மன்னிப்பையும் எதிர்கால வாழ்க்கைக்கான ஆசீரையும் பெற்றனர். அவர்களின் வழியாக கடைபிடிக்கப்பட்ட சந்திப்பு கூடார முறை இன்று நாம் ஆலயம் அமைத்து ஆண்டவனின் ஆசீர் பெற வழிவகுத்தது. எப்படி மலை ஏற்றம் செய்பவர் தனக்கு தேவையான சக்தியை கூடாரம் அமைத்து ஓய்வெடுத்து தன்னைத் தானே புதுப்பிது மீண்டும் தன் பயணத்தைத் தொடங்குவாரோ அது போல நாமும் நமது கூடாரத்தை உருவாக்க வேண்டும். நம்முடைய இந்த தவக்கால பயணம் பாஸ்கா என்னும் கொண்டாட்டத்தை இலக்காக அடைவதே. தனித்திருந்து, இறைவனை நற்கருணைப் பேழை என்னும் சந்திப்பு கூடாரத்தின் அடிக்கடி சந்தித்து செபித்து நம்மை நாமே புதுப்பித்துக் கொள்வோம். கூடாரம் என்னும் ஆற்றல் மையத்தில் இருந்து ஆற்றல் பெறுவோம். ஆண்டவனின் ஆசீரை அபரிமிதமாக பெற்று மகிழ்வோம்.

இன்னும் சில உங்களுக்காக

சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா

சிலுவைப்பாதை  தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...