Wednesday, 9 March 2022
தொழிலாளர்களின் பாதுகாவலர். புனித வளனார்.
வீட்டை உயர்த்திட நாட்டை வளர்த்திட, நாளைய உலகம் நலமே உருவாகிட நன்றே உழைப்பவர் தொழிலாளி. வியர்வைத் துளிகளால் உலகை செதுக்கும் சிற்பிகள். உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கும் தொழிலாளர்களுக்கு எல்லாம் முன் மாதிரிகையாய் பாதுகாவலராய் இருப்பவர் புனித வளனார். தச்சு வேலை செய்து தனித்தன்மையோடு திகழ்ந்தவர். இவரின் திருவிழாவினை நவநாட்களாக சிறப்பித்து மகிழ்ந்து கொண்டிருக்கும் இவ்வேளையில், தொழிலாளர்களின் பாதுகாவலர் புனித சூசையப்பர் என்னும் கருப்பொருளில் இன்றைய நாளில் நம்மை சிந்திக்க வைக்க வருகின்றார் வேலூர் மறைமாவட்ட பள்ளிகொண்டா பங்குத்தந்தை. அருட்தந்தை அற்புத்.
கடின உழைப்பு கட்டாயம் பலன் தரும். அதற்கான காத்திருப்பு ஒரு நாள் வெற்றி தரும். கடினமாக உழைத்தும் காத்திருந்தும் தன் மகிழ்வான வாழ்வால் மகத்தான காரியங்களை செய்தவர் புனித சூசை தந்தை. இன்று கல்லுடைப்பவர் முதல் கணிணி இயக்குபவர் வரை தொழிலாளர்களாக தங்கள் வாழ்வையும் உலகையும் செதுக்கும் அத்தனை உள்ளங்களையும் நினைத்து பார்த்து வாழ்த்துவோம். விடாமுயற்சியுடன் விஷ்வருப வெற்றி பெற காத்திருக்கும் அவர்களின் வாழ்வு தொழிலாளர்களின் பாதுகாவலாம் புனித சூசை தந்தையின் அருளாலும் ஆசீராலும் நிரம்பட்டும். தொடர்ந்து உழைப்போம். தொழிலாளர் உணர்வினை புரிவோம்.
இன்னும் சில உங்களுக்காக
சிலுவைப்பாதை 2025 சகோ. மெரினா
சிலுவைப்பாதை தந்தை மகன் தூய ஆவியின் பெயராலே ஆமென். முன்னுரை இயேசுவின் சிலுவைப்பாதை வாழ்க்கையின் பாதை. வாழ வழி இல்லையே என திகைக்க வேண்டாம். ...